எனது கவிதை
-----------------
என் நினைவலைகள்
தேய்மானமடைகின்றன !
நைந்து போன என் உணர்ச்சிகள்
இன்று நாட்டுடைமை ஆக்கப்படுகின்றன !
எனது வலிகள்
இப்போது விவாதப் பொருள்கள் !
மதி பேசும்
எனது சிந்தனை
விலக்கப்பட்டது !
வெறும்
விதிக்கொள்கை என்று !
மனதேர் உழவு செய்யும்
மின்னல் கீற்றாய்
வசை சொற்கள் !
என் மௌன மயக்கங்கள்
களையப் பட்டன !
கவிதை என்னும்
காரிகையால் !
இருந்த போதும்,
கரைந்து போகும் கனவுகளாய்
என் கவிதை இன்பம் !
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-06-01