புத்தாண்டே நீ வர வேண்டும்
-------------------------------
புத்தாண்டே நீ வர வேண்டும்
வரம் பல தர வேண்டும்
யுத்தங்கள் இல்லாத பூமி வேண்டும்
யுக்திகள் இல்லாத அன்பு வேண்டும்
வறுமைகள் இல்லாத தேசம் வேண்டும்
வாழ்க்கையை ஜெயிக்க தன்னம்பிக்கை வேண்டும்
கவலைகள் மறக்கின்ற காட்சிகள் வேண்டும்
கண்களில் என்றும் ஆனந்த கண்ணீர்
மட்டுமே வேண்டும்
இயற்கையின் சீற்றம் தணிய வேண்டும்
இல்லார், இருப்போர்
சமத்துவம் ஓங்க வேண்டும்
புத்தாண்டே நீ வர வேண்டும்
எல்லா நல்லவைகளுடனும்
புத்தாண்டே நீ வர வேண்டும்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2010-01-13