Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

என் கவிதைகளுக்கு உயிர்

- முத்துசாமி பழனியப்பன்

என் கவிதைகளுக்கு உயிர் கொடுப்பவர்கள்
------------------------------------------------

மாலைப் பொழுது மலையிடம் மறைவிடம்
கேட்டுக் கொண்டிருக்கும் சூரியன்
பாதி வானத்தில் பறந்து கொண்டிருந்தது
பறவைகளும் பட்டங்களும்

கடலைக் காட்டைக் காவல் காத்திடும் பொம்மை
கரையான்களை உண்ணும் - கோழிகள்
விரட்டும் சிறுவர்கள்
கோரைப்புல் மேய்ந்து கொட்டகை திரும்பும்
ஆடுகள், மாடுகள் - வளைந்தோடும்
வாய்க்கால் - கறை நீக்கக் கரும்பாறைகள்
மதகுவழி வயல் காணும் வெண்நுரை பொங்குநீர்
தடம் மாறி வெளி கண்ட மீன்கள்

களை பறிக்கும் கூலியாட்கள்
அறுத்த புல் நிரப்பும் வண்டிக்காரன்
பல்துலக்க வேலங்குச்சியொடிக்கும் மேய்ப்பன்
கபடி ஆடிக் களைத்த காளையர் சிலர்
தேர்வுக்கு தயாராகும் பட்டதாரிகள்
விளையாடி வீடு திரும்பும் வெள்ளைச் சட்டைகள்

கரட்டை நலம் விசாரிக்கும் காற்று
தென்னை மரத்தை தூணாக்கிய வீடு
அடுப்பின் பசி போக்க விறகு சுமக்கும் கிழடுகள்
உலர்ந்த ஆடைகளை உதறியெடுக்கும் சிறுவர்கள்
பசுமாடு நோக்கிப் பாய்ந்தோடும் கன்று

வெட்டிக்கதை பேச ஏரி நோக்கும் இளசுகள்
வேலிப்புதர் பற்றியதோவென பதற வைக்கும்
பீடிப் பிரியர்கள் - கள்ளுண்ணும் கருப்பன்கள்
இருவேளையும் குளித்து விடும் சுத்தக்காரர்கள்
இலந்தை பழம் உலுக்கி உதிரத்தோடு
வழி நடக்கும் பரட்டைத் தலைகள்
உழுது போட்ட காடு; காய்ந்த மண்; கழுவாத ஏர்க்கலப்பை
விடுப்பெடுத்து ஒதுங்கிடும் கரட்டுக் கோயில்
எலிக்கு கண்ணி வைக்கும் தோட்டக்காரன்
மீனுக்கு தூண்டில் போடும் விடலைகள்

வழியில் பூத்திருக்கும் வாசனை மலர்கள்
குலை தள்ளிய வாழை மரங்கள்
மணம் பரப்பும் மஞ்சள்
நெடி வீசும் புகையிலை
கடித்திட தூண்டும் கரும்பு
கசக்கிட தோன்றும் நெற்கதிர்கள்
இரகசியம் தாங்கிடும் பூவரசமரம்

இன்னமும் இதுபோல் எத்தனையிலோ
பொதிந்திருக்கிறது எனக்கான சொர்க்கம்..!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2010-01-13


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • மதம் விரும்பும் மந்தைகள்
  • மழை வேண்டல்
  • நிலைக் கண்ணாடி
  • நழுவுதல்.. உருண்டைச்சோறு
  • அயோத்தி

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube