மதம் விரும்பும் மந்தைகள்
--------------------------------------
மதம் அது களிருடைய வளம்
பெருங்கடன் கொண்டாயோ நீ மனிதனிடம்
வராக்கடன் வசூலித்திட - கட்டாயப் பறிமுதலாய்
தன்வசப்படுத்தினான் உன் ஒரே வளத்தை!
இப்போதும் அப்போதும் எப்போதுமாய்த்தான்
மதம் அதற்குப் பிடித்துப் போகிறது
மனிதா காடு கண்டதுண்டா நீ? - களிறு
மதம் கொண்ட வேளையிலே
மதமடைந்து செய்வதும்
மதம் பிடித்துச் செய்வதென்பதும்
வேறுவேறு - குற்றங்களில்
சிறிதென்றும் பெரிதென்றும் இல்லை
சேருடல் கொண்ட களிறாய் - தரந்தாழ்த்திக்
கொள்கிறாய் உன் மதம் சிறிதென்றும் பெரிதென்றும்
யானை மதம் பிடித்து எப்போதாவது தான் சாகிறது
மானுடா நீ சாகும் போதும் மதம் பிடித்துச் சாகிறாய்
அறிந்த வேற்றுமைகளெல்லாம் - அறிவு
எண்ணிக்கையில் மட்டும் தானா?
சாதி இரண்டொழிய வேறில்லை என்றானே - பாரதி
கனவு எப்போது மெய்ப்படுமடா?
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-09-21