திறவியல்..
---------------
01.
ஒரே பூட்டை
மூன்று சாவிகள்
திறந்தன
நான்
ஒன்றைத் தேர்ந்தெடுத்தேன்
இரண்டைத்
தொலைக்க
முடிவெடுத்தேன்.
02.
அலுவலகப் பெற்றோர்..
பள்ளி முடித்து
வீடு திரும்பும்
குழந்தைக்கு
எதிர் வீட்டு அக்காவோ
மளிகைக் கடை மாமாவோ
தினம் சாவி கொடுக்கும்
பொம்மைகள்..
03.
பாதி வழியில்
திரும்பிச் சென்று
இழுத்துப் பார்த்த
அத்தனை முறையும்
கையோடு வருவதாயில்லை
வாயிற் பூட்டும்
வாழ்ந்த நாட்களும்..
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-08-09