Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

படைப்பு.. வெறுங்கை..

- கார்த்தி.என்

படைப்பு.. வெறுங்கை..


01.
வெறுங்கை
-----------------

எழுதி அழு
அழுது எழு
எதாவது செய்!

உள்ளங்கையில்
ஒன்றுமில்லாதது
உன்னோடு எனக்கும்
மட்டுமேனும்
தெரிந்ததாய்ப் போகட்டும்..

திரும்பிய கவிதைகளைத்
திருத்தாது
தினம் இரவல் தரும்
புத்தகத்திற்குள் பத்திரமாய் வை

உன் முறையில்
ஒருமுறையேனும்
அவர்கள் காட்டியதையே
சற்று உயர்த்திக் காட்டியிரு..
ஆள் காட்டியவர்களுக்கு

அதற்கடுத்த விரல்
காட்டியவர்களுக்கும்
அப்படியே!



2.
படைப்பு
---------------
சட்டைப்பையுள் மழை.. நேற்றிரவு பெய்தொழிந்த
மழையானது
சன்னல் கம்பிகளின்
நீள அகலம் பொருந்தப்
பளிச்செனப்
பதிந்திருந்ததென் செல்பேசிக்குள்..

தரை தொடும் முன்பான
அந்தரத் துளிகளைத்
திரையில் வெகுநேரம்
பார்த்திருந்து மீண்டு
சலனமின்றிச் சொன்னது குழந்தை
நேற்றே நனைந்துவிட்டதாய்..

அவ்விரவில் எழுதிய
கவிதையொன்று..
சட்டைப்பையுள்
நான்காய் மடிக்கப்பட்ட காகிதத்தில்
செத்துப் போயிருந்தது
இந்நேரத்தில்.


பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-06-01


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • திறவியல்

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube