ஓலைக்குடில்
--------------------
கடல் உப்புக்காற்று சில்லென மேனி தடவ
உச்சி வெய்யில் உசிரை உலுப்ப
துடுப்பின் வலிப்பில்
நீரினோசை நிசப்தத்தை
நிர்மூலமாக்க
கடல் நாரைகளின் நாட்டம்
படகின் மீன்களை நாட
கரையைத் தேடி
ஓய்வின்றி வலிக்கின்றான்….
நிலையற்ற இவ்வாழ்வில்
நிம்மதி தேடும் ஈழத்து மீனவன்
ஓலைக்குடிலில் ஒரு கஞ்சி சோற்றுக்கு
"நாய் படாப்பாடு" என எண்ணத்
தோன்றாதவனாய்
கடலன்னையின் அரவணைப்பில்
பழகிப்போன அவன் வாழ்வில் நித்தமும்
ஒரு நம்பிக்கை பெருமூச்சு.....
ஈழப்போரிலும்
ஆழிப்பேரலையிலும்
உருக்குலைந்த வாழ்க்கையை
செப்பனிட நாதியற்றவனாய்...
ஏலேலோ ஐலசா காற்றினில் மிதந்துவர
அவன் மீண்டும் புத்துயிர் பெற்றவனாய்
கரையைத்தேடி படகை வலிக்கின்றான்…
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-06-15