சிதறிய உறவுகள்
----------------------------
மழலைகளின் அழுகுரல் இன்னும்
ஓயவில்லை!
குருதி பாய்ந்த மண் இன்னும்
காயவில்லை!
ஐயோ! என்னை காப்பாற்று
என்றோர் எத்தனையோ
விழலுக்கு இறைத்த் நீராக
பாய்ந்தனவே அத்தனையும்!
கொடுமையிலும் கொடுமை - எம்
தேசத்தில் அரங்கேறியதே!
பாடை தூக்க நால்வரில்லை
பறைந்தோர் பக்கத்தில்லை
செல்லினிலே சிதறினரே!
எல்லை காத்தோர்
முல்லை பூத்த முள்ளிவாய்க்காலில்
களமாடி மௌனத்தினரே!
சுடுகாடாய் சோபையிழந்த -எம்மண்
மீண்டும் எழும்!
எம்தேசம் விடியும் வரை
மீண்டும் எழுவோம்!
எவ்விடர்வரினும் அடிபணியோம்!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-06-01