தீபாவளி
--------------
ஊரெங்கும்
புஸ்வாணங்களும்
சங்கு சக்கரங்களும்
தீபாவளியாய்
சிரித்தன
முடிந்து போன
கம்பி மத்தாப்புக்களையும்
புஸ்ஸான வெடிகளையும்
கைகளில் ஏந்தி
முனுசாமியின் மகன்
தன்
கனவுகளைக்
கொளுத்தினான் !
- ரா.கணேஷ்
- ரா.கணேஷ்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-02-05