மே தினம்
--------------
மே ஒன்று
உலகெங்கும் முழக்கம் - ஆம்
உழைப்பாளர் தினம்
உள்ளத்தில் ஏனோ இலேசாக
உரசுகின்ர உண்மைகளின்
உறுத்தல் ஒசையற்று மெளனமாய்
உண்மைத் தொழிலாளியைப் போல்...
மேதினியின் ஓட்டம் ஏனோ
மேதினத்தின் ஓட்டத்திலிருந்து
மெதுவாக மாற்றம்
கால்களில் விலங்கோடு
கப்பலில் ஏற்றப்பட்டு
கடல்கடந்து
கடத்தி விடப்பட்ட குற்றவாளிகளால்
கட்டப்பட்டதாம் அவுஸ்திரேலியா.....
கேட்டிருக்கிறோம் சரித்திரத்தில் - ஆனால்
கேட்கவில்லை ஆதிமனிதன் குரல்
அவனியில் மேதினத்தில்
இந்தியத் தோட்டத்தொழிலாளர்களினால்
இலங்கையின் பொருளாதாரம் கட்டப்பட்டதாம்
இழந்தபோது வாக்குரிமையை அத்தொழிலாளன்
இயலாமை ஒன்றே கொண்டிருந்தான்
இன்று ஏனோ
-சக்தி சக்திதாசன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-05-05