சொர்க்க பூமி!!
வீரத் தலைவனின்
விவேகத்தில்
நிகழ்ந்த
தவறு!
விலை போனவர்களால்
வீழ்ச்சியடந்தது
நாடு!
இன்றோ
(நா)நேச நாடுகளின்
ஆக்கிரமிப்பில்
கற்பு முதற்கொண்டு
எல்லாமே கொள்ளை போகிறது
அல்லது
விற்பனையாகிறது!
ஆக்கிரமிப்பாளர்கள்
'சொர்க்க பூமி ஆக்குவோம்'
என்கிற தம் வாக்குறுதியை
நிறைவேற்றி இருக்கிறார்கள்!
'ஈராக்'
அவர்களுக்குச்
சொர்க்க பூமியே!
-இமாம்.கவுஸ் மொய்தீன்.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-02-24