வேண்டும்....?
தேடவேண்டும்
தெலைந்த மொழியை...
அதிகார வர்கத்தினால்
ஆளுமை கொண்டுருப்பது!
இன்றைய மொழி
மணவயதை கடந்தால்
முதிர்கன்னியாம்...
இணையாக?
தேடவேண்டும்
தெலைந்த மொழியை
மணமுடிந்த மறு
மாதமே இல்லையெனில்
மலடியாம்...
இணையாக?
தேடவேண்டும்
தொலைந்த மொழியை
கட்டியவனை காலன்
கொண்டால்
கைம்பெண், விதவை...
இணையாக?
தேடவேண்டும்
தெலைந்த மொழியை
தனிவுடமையானவள்
விதிவசத்தால்
பொதுவுடமையானால்
வேசி, விபச்சாரி...
இணையாக?
தேடவேண்டும்
தெலைந்த மொழியை
எகிப்தின் மம்மிகள் போல்
தோண்டப்பட வேண்டும்
இல்லையேல்....
உருவாக்கப்பட வேண்டும்
பவித்திரமான புதுமொழியை!
-- கவி.வள்ளி
புதுச்சேரி.
- கவிவள்ளி
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-01-20