தனிமையில்.. பூக்கட்டும் புதிய புன்னகை
01.
தனிமையில்
---------------------
கனவுகள் ஆதரிக்க
கவலைகள் கண்விழிக்க
இரவினில் விழித்திருந்தேன்
தனிமையில் அமர்ந்திருந்தேன்
கடும்புயல் கடந்து வந்தும்
நெடும் பாதை தெரிகிறது
உறவுகள் பிரிந்ததனால்
தனிமையே கொல்கிறது
கனவுகள் பிறந்தாலும்
கவலையில் கரைகிறது
கரையிலே நடந்தாலும்
பெருங்கடலே தெரிகிறது
வடுக்களை பார்க்கவில்லை
தீப்புண்ணும் ஆறவில்லை
இரவுகள் தூக்கமில்லை
இனி ஒரு உறவும் இல்லை
பொன்னில் மனதை வைத்து
பொய் சொல்லக் கற்றுக் கொண்டேன்
மண்ணில் மனதை வைத்து
மட்கிடும் நிலையைக் கொண்டேன்
என்னில் உள்ளதெல்லாம்
பொய்யும் புரட்டும் ஆக
கண்ணில் நீர் வழிந்தும்
கவனிக்க ஆளில்லை
சொல்லில் உள்ளதெல்லாம் சூட்சமம் என்றுசொல்லி
சொல்லிய மனிதரெல்லாம் சூனியர் என்றே எண்ணி
அண்டை அயலவரும் ஆரிய உறவினரும்
வேண்டாம் என்றே சொல்லி
விருட்டென்று புறப்பட்டும்
கவலைக்குள் கரைவதனால்
கவனிக்க ஆள்வேண்டி
கனவுகளில் தேடுகிறேன்
விட்டு வந்த சொந்தங்களை
02.
பூக்கட்டும் புதிய புன்னகை
--------------------------------
பூக்கட்டும் புதிய புன்னகை
எரிந்து அழியட்டும் பூ விழங்குகள்
ஒழியட்டும் ஒப்பாத கடமைகள்
உணரட்டும் புதிய உலகினை
கதவுகள் இங்கெதற்கு
கயவர்கள் அழிந்தபின்னர்
கடமைகள் இங்கெதற்கு
உணர்வுகள் உணர்ந்த பின்னர்
இருட்டினில் கோப்பெதர்க்கு
இந்தியர் விழித்துவிட
பகட்டினில் வாழ்வெதற்கு
பட்டினிச் சாவிருக்க
பகற்பொழுது தேவையில்லை
பகலவன் உலா வர
வழித் துணை தேவையில்லை
மகேசன் பவனி வர
பூக்கட்டும் புதிய புன்னகை
பூவுலகு மீட்சி பெற
உதிக்கட்டும் புதிய விதிமுறை
அரசியலும் தூய்மை பெற
இருட்டினில் சட்ட இயற்றலோ
வெளிச்சம் கொண்டாருங்கள்
குறைகள் நிறைய இருக்கலாம்
வெளிச்சத்தில் செயல்படுங்கள்
பூக்கட்டும் புதிய புன்னகை
புவியாளும் மன்னர்கள் மத்தியில்
தேர்தலுக்கு வாக்களித்தால்
முடியுமா மண்ணாலும் மன்னர் கடன்
மடியட்டும் பழைய விதிமுறை
தேர்தலுக்கு மட்டும் மன்னர் வரும் முறை
வெளிவிடுங்கள் ஆட்சி முறையினை
மன்னரும் அறிந்து கொள்ளட்டும்
பூக்கட்டும் புதிய புன்னகை
புகைந்து வாழும் மனிதர் வாழ்விலும்
பட்டினிச் சாவிருக்க
பகட்டான வாழ்வெதற்கு
பகலவன் வந்தபின்னும்
இருட்டறையில் கோப்பெதர்க்கு
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2012-01-24