Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

நிலவின்மீதான காதல்

- ந.பரணீதரன்

காதல்தான் எனக்கு புத்துயிர் தருகின்றது.
தாயின் மீது தாய்நாட்டின்மீது உற்றார்
உறவினர் மீது உண்மை நட்பின் மீது
எல்லாவற்றிற்கும் மேலாக இந்த கறுப்பு
நிலவின்மீதான காதல்.. உங்களிற்காய்
ஓரு சில துளிகள். . .காதல் துளிகள்...


1)
இன்றைய பெண்ணா
இலக்கியப்பெண்ணா நீ
இப்படித் தயங்குகின்றாய்
என் பெயர் சொல்லிக்கொள்ள . .

2)
உனக்காக ஏதேதோ ஏக்கத்துடன்
காத்திருந்தேன் கால்கள் வலிக்க
தென்றல் வருடவில்லை
திங்கள் ஓளியூட்டவில்லை
மலரோ வாசம் பகரவில்லை
மங்கை உன்தன் வருகைமட்டும்..

3)
ஒற்றைத்துணிவுடன் என் காதலை
துளித்துளியாய் மொழிந்துவைத்தேன்
பிரசவத்திற்காய் காத்திருந்த
நிறைமாத கர்ப்பினிபோல்
பொத்திவைத்த ஆசைகளை
பூட்டிவைத்த உன் வெட்கத்தை
தூக்கியெறிந்து நீ தந்த முத்தம்
இன்றுவரை இனிக்கின்றது
நீ தான் தொலைவில்
நினைவுகளுடன்தான் நாம் வாழ்கின்றோம்

4)
வேலைக்களைப்பில் வீழ்ந்து படுக்கும் எனக்கு
பீப் பீப் இசையுடன் வரும் உன்
எஸ் எம் எஸ் தான் உற்சாகம் தருகின்றது
ஏழைச்சிறுவனிற்கு கிடைத்த ஓற்றை மிட்டாய் போல

5)
உன்னைத்தான் கருவாய் வைத்து
வரைகின்றேன் ஓர் கவி
இன்றுவரை உனக்கு ஏன் புரியவில்லை !
இல்லை புரிந்தும் மௌனிக்கின்றாயா ?
அதை நான் சொல்லவேண்டும என..
நானும் காத்திருக்கின்றேன் நீ
சொல்லிக்கொள்வாய் என . .

6)
நண்பர்களின் கிண்டல் மத்தியிலும்
நாசூக்காய் நான் அனுப்பும் எஸ்எம்எஸ்
அதற்காய் நீ அனுப்பும் பதில்
புரிகின்றது காதலை மறைத்துவைப்பதிலும்
ஓர் சுகம் இருக்கின்றது
சந்தித்துக்கொள்ளாமல் இப்படியே காதலிப்போமா ?

7)
கருவறைக்குள் உழன்றபோதே
புரிந்தேன் எனக்காய் ஓருத்தி எங்கோ இருப்பதாய்
அவள் நீதான் என்று இன்றுவரை ஊகிக்கவில்லை
எங்கிருப்பாய் நீ என ஏங்கித்திரிந்தேன்
இங்குதான் நீ இருந்தாய் என
இன்றுதான் அறிநதுகொண்டேன்

8)
விழிமூடிக்கொண்டாலும் விலகமறுக்கும் ஓளி
போர்த்திப்படுத்தாலும் புரட்டிப்போடும் குளிர்
கட்டிவைத்தாலும் துள்ளியோடும் மனம்
எல்லாமே உன் அருகாமை, உன் ஸ்பரிசம்
அன்று தந்த இன்றைய நினைவுகள்
என் சுவாசம்கூட உன்வாசம் தேடுது

9)
சுயம் என்னைவிட்டு போனாலும்
நிதம் உன் நினைவுகள் போகாது
வானவில் காட்டிய உன் விழிகள்
வாசல்வரை வந்துபோன உன் கொலுசொலிகள்
மனதின் ஓரம் வருடிச்சென்ற இதழின்மென்மை
என்றுமே என்னைவிட்டு விலகாது

10)
அழகழகாய் கவிவடித்தேன்
வார்த்தைக்குள் வாசம் சேர்த்தேன்
உனக்காய் எங்கேயோ தேடி
எடுத்து கோர்த்தேன் மாலைகளாய்
ஒன்றுமே உன்னைப்போல மென்மையாய் இல்லையே !
நீ தான் என் இனிய கவிதை !
உன்னைவிட வேண்டுமா எனக்கு வேறு கவிதை !

11)
என்றுதான் திறந்துகொள்ளுமோ
என்மீதான உன்காதல்வெளிச்சம்
ஒற்றைக்கால் தவமிருக்கும்கொக்குபோல
இலவுகாக்கின்றேன் உன்தன் இதழ்மொழிக்காக
எழுதம் மடலின் முடிவில் என்றுதான்
எழுதிக்கொள்வாய் காதலுடன் என

12)
மாலையானதும் மனம் அலைபாய்கின்றது
ஓடி ஒளிந்து தூணின் பின்னிருந்து நோக்கும்
பிஞ்சுக்குழந்தைபோல் சின்னதொரு சிரிப்புடன்
வாசல் வந்து நோக்குகின்றேன்
உன் கொலுசொலி கேட்காதா ?
உன் கூந்தல் வாசம் வீசாதா ?
மாட்டின் சலங்கையொலிகளையும்
மலர்களின் மகரந்த வாசங்களையும்
விஞ்சிக்கொண்டே. . !

இன்னமும் வளரும் இந்த துளிகள்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01


zeenu

16 years 4 months ago

அழகழகாய் கவிவடித்தேன்rnவார்த்தைக்குள் வாசம் சேர்த்தேன்rnஉனக்காய் எங்கேயோ தேடிrnஎடுத்து கோர்த்தேன் மாலைகளாய்rnஒன்றுமே உன்னைப்போல மென்மையாய் இல்லையே !rnநீ தான் என் இனிய கவிதை !rnஉன்னைவிட வேண்டுமா எனக்கு வேறு கவிதை !rn

Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • இப்படியே இருக்ககூடாதா ?
  • காதல் செய்வாயா ?
  • அமாவாசை நிலா
  • கண்டுகொண்டேனடி
  • மௌனத்திற்கு அர்த்தம் என்ன ?
  • தராசுத்தட்டில்
  • நதிபாய்ந்த தடம் நோக்கி
  • இருண்டவர்கள் நாம்

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube