எவனாவது....?
கன்னிப் பருவம் கலைந்த கோலமாகி
கனவு கண்டு கனவு கண்டு
கருவளையமிட்ட கண்களும்
சோர்ந்து அழகு குலைந்து...
முப்பதைத் தாண்டிவிட்ட முதிர்கன்னியாய்...
வரனுக்காக வாசலில் பழிகிடக்கும் பேதை நான்.
அச்சம் நாணம் மடமை பேதமை
அவைகளும் அற்றுப்போகுமுன்னேயாவது
எவனாவது வருவானா
என்னை விலை பேச?
> கிரிஜா மணாளன்
திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-01-14