காதல் என்பது ஒரு மென்மையான உணர்வு...
மென்மையான உள்ளங்களால் மட்டும் தான் அதை உணர முடியும். அனைவரின் மனமும், ஏதாவது ஒரு கணத்தில், யாருக்காகவது, இளகத் தான் செய்கிறது. அந்த இளகிய மனதைத் தான், நண்பர் இ.இசாக்கின் கவிதை படம் பிடிக்கிறது.
காதல் வயப்படும் பொழுதே, மனம் இளகிவிடுகிறது. கண்ணில் படும் உயிர்களின் மீதெல்லாம் அன்பு தோன்றிவிடுகிறது.
உதவி செய்ய தூண்டுகிறது. இல்லையென்றால், சாலையோடு போகும் ஒருவன், கருவமரத்துப் பிசினில் ஒட்டியிருக்கும்
பட்டாம்பூச்சியை, மெனக்கெட்டு விடுவித்து, சிறகடித்துப் பறப்பதைப் பார்த்து ரசிப்பானா?
காதல் உணர்வு, உள்ளே இருக்கும் பொழுது தான், வாழ்வைக் கொண்டாட மனம் விழையும் - தன் வாழ்வு மட்டுமல்ல, அனைத்து ஜீவன்களின் வாழ்வையும் தான் கொண்டாடும்...
நண்பர் இ.இசாக்கின் கவிதைக்குப் பாராட்டுகள்...
காதலைக் கொண்டாடும் கவிஞர் வாழ்க....!
- சாஜகான், இந்தியா
Comments