முடிந்து போனதாய் இல்லை.
இன்னும் பதிவுகளாய் இருக்கும்
பள்ளிப் பருவ வாழ்க்கையும்,
இன்றைய என் வாழ்வும்,
ஒரு கணம் சிந்திக்கவைத்தது.
அரைவயிறுக் கஞ்சியோடு
அம்மா பள்ளி அனுப்பிவிட்டு
அந்திவரை அவளும் இருப்பாள்.
அன்னத்தை அள்ளியூட்ட.
பள்ளி போகும்போது
தாயவளின் முகம் பார்க்கமுடியாத
ஒரு பரிதாபநிலை.
ஐயோ!..........
பிள்ளை சாப்பிடாமல் போகுது.........
ஐயோ!
அம்மா...............
வருத்தப்படுகிறாவே - எனக்கு
பசியில்லையம்மா.
கண்கள் மட்டும் பேசி
விடைபெற்ற நாட்கள்
எத்தனையோ..............
என் மகன் வாழ்வான்
என்னைப் பார்ப்பான்.
வயிறு நிறைய - சாப்பாடு போடுவான்.
அம்மா கற்பனையில்.
நானோ அம்மா வயிற்றை
சின்னனில் அன்பாலும்,
வளர்ந்த பின் ஏழ்மையை போக்கி
இன்பப் படுத்தவும் எண்ணிய மனம்.
அம்மா - இது எதுவுமே
முடிந்து போனதாய் இல்லை.
இன்னும் அரை வயிறுக் கஞ்சி
ஆன சாப்பாடில்லை.
நிலத்தில் சுருண்டு படுத்த வாழ்க்கை
அம்மாவின் கற்பனைகள்
இன்னும் கண்ணீரால்
நிரப்பப்படுகின்றன...............
-p. ஆயிஷாசுதன்
ஸ்கந்தபுரம
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-12-24