வாழ்க்கை அழைக்கிறது
நானோ
இன்னும் இறந்த காலங்களில்
இருக்கிறேன்
எல்லோர் கண்களிலும்
கலர் கலராய்க் கனவுகள்
நானோ
பழைய கறுப்பு வெள்ளை
கனவுகளுக்குள்ளேயே
பதுங்கிக் கொண்டிருக்கிறேன்
மறக்கத்தான் நினைக்கிறேன்
ஆனால் மறக்க
முடியவில்லை
- நளினி
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01