1.பிச்சைக்காரர்கள்
அமைதிக்காக
ஆலயத்தினுள்
அறிவுஜீவிகள்!
வயிற்றுக்காக
வாசலில்
உயிர் உண்டியல்கள்…!
சென்னை - நவின், இர்வைன் (கலிபோர்னியா)
2.அன்னையர் தினம்
அதிகாலையில்
அழைத்து
வாழ்த்துச் சொன்னால்
அன்னையின் அயர்ந்த
தூக்கம் கெட்டுவிடும் என்று
அலுவலகம் சென்றவன்
அனுமதி பெற்று
அவசர அவசரமாகக் காரில்
பறந்து வந்தான்
பார்வையாளர் நேரம் முடிவதற்குள்…
ஆதரவற்றோர் இல்லம் நோக்கி!
சென்னை - நவின், இர்வைன் (கலிபோர்னியா)
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-11-26