1.
வயோதிபன் தீட்டிய சித்திரத்தில்
அவனின் கைநடுக்கம்
நிதர்சனமாய்
அந்தி வானில் தெரிந்தது
2.
கண்டும் காணாமல்ப் போகும்
மனிதர்களின் பின்னால் போகும்
எல்லைகளில்லாத என்
சிந்தனை
3.
காலையில் பார்த்தேன்
எனக்காக ஒரு புன்னகை செய்தாள்
எவன் கண் பட்டதோ
மாலையில் மானமுள்ளவள்
மரணித்துவிட்டாள்
முள்ளோடு பிறந்த
சிகப்பு ரோஜா
4.
என் உடலென்ன
சுமைதாங்கியா ?
அவளின் இதயமும் என்னிடமல்லவா
இருக்கிறது
- நிர்வாணி
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01