வதந்தி
பேருந்து பயணத்தின்
இரைச்சல் இடையே
பயணிகளுக்குள் பயணித்து
விட்டுச் சென்ற பாடநூலை
பெற்றுச் செல்லும்
தெரு சந்திப்பின் !
வெட்டிப்பேச்சு மாநாட்டிலும்
நீர் நிரம்பிய குடங்களுடன்
நெஞ்சம் நிரம்பாத மங்கையரிடமும்!
என்மேல் ஏற்படாத
உன் காதல்
"வதந்தி" களாக
வாழ்ந்து செல்கிறது
கவிதை : செல்வா
- செல்வா
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-10-19