எனக்கு முன்பே யாரோ
சென்றிருக்கிறார்கள்
கடலை நோக்கி
காலடித் தடங்கள்
யாரும் இல்லை
எதிரில்
என்னைப்போல்
நீரை
மிதித்துவிட்டு
திரும்பிவிட
நினைத்திருந்தால்
என்னை நோக்கி
வந்திருக்கும்
பாதச் சுவடுகள்
கடலைத் தாண்டும்
முயற்சியில்
வீழந்திருப்பார்
கடலுக்குள்
யோசித்துத்தான்
செல்லவேண்டும்
வா என்று
அழைக்கும் அலையை
நோக்கி
- ஓ.சுபாசு
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01