தீக்குச்சி
கவி ஆக்கம் க.முத்துக்குமரன்
தீண்டலுக்காக
காத்திருக்கும்
தீயிளவரசி!
பற்றும் முன்
பெட்டியிலும்
பற்றியபின்
தொட்டியிலும் வசிக்கும்
பிதாமகன்!
பெயரில்
“தீ” யை சுமக்கும்
தற்கொலைவாதி!
விளக்கிற்கு
வாழ்க்கை கொடுத்துவிட்டு
தன் வாழ்வை
இருளாக்கி கொள்ளும்
தியாகி!
பஞ்சபூதங்களில்
“ஓரினம”; என்பதை
தலைக்கனத்தோடு
உருவகத்தில் சொல்லும்
“பேரினம்: !!!
கவி ஆக்கம் க.முத்துக்குமரன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-01-30