கடிதம்
ஆக்கம்: செல்வா
கடல் தாண்டி
பொருள் தேட சென்ற
கணவனுக்காக.
கொண்டவளின்
எண்ணங்களையும்
ஏக்கங்களையும்
வார்த்தைகளாக
சுமந்தபோதும்
உதிர்ந்து விடாமல்
ஊமையென
நித்திரைகெட்டு
நெடும் பயணம்
தொடர்ந்து
விசா இல்லாமல்
விமானம் ஏறி
பேணுகிறவன் கைகளால்
பேரிடி தாக்கினாலும்
கடமை தவறாது
கொண்டபணியினை
குறைவின்றி முடிக்க
உரியவனிடம்
ஓப்புவிக்கிறேன்
ஓரம் கிழிக்கப்பட்டு
“கடிதமென”
ஆக்கம்: செல்வா
- செல்வா
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-01-22