விதையாகும் மரம்
கவிஆக்கம்: அறிவுநிதி
இருட்டறையில் வெளிச்சங்களை
சேகரிக்கிறாய்
நீண்டு வளர சுருண்டு படுத்திருக்கும் - ஒரு
காலத்தின் வலிமை
பூ பூவைத்தருகிறது
உயிருக்குள் உயிர்நெளியும்
மொழியற்ற தேசம்
உன் தடாகத்தை
நிறைத்திருக்கின்றன
உனக்கான பாரம்பரியம்
தன்னை வருத்தி
உயிர்கக்குகிறாய்
உனக்கான புன்னகையோடு
வணங்குவதில்
முதன்மை நீயே!
கவிஆக்கம்: அறிவுநிதி
006590054078
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-01-15