தாயின் பாசம்
கவிஆக்கம்: பாரத்
புலிக்கண்மயிலே
புளியமரத்தின் ஓரத்திலே
ஓலை குடிசையிலே
வற்றகுழம்பு வாசம் வீசயிலே
சாணமிட்ட தரையினிலே
தாயின் மடியினிலே
தலைசாய்த்து படுக்கையிலே
உறங்கிய நேரம் தெரியவில்லை
சுகமாய் எழுந்தேன் காலையிலே
சிங்கை சென்றேன் அன்று மாலையிலே
பஞ்சு மெத்தையிலே
படுத்து புரலுகையிலே
தூக்கம் வரவேயில்லை
நாகரீக உணவினிலே
நாக்கு செத்துப் போனதடி தாயே
அன்று நீ
அன்பால் பரிமாறிய வற்றகுழம்பு
வாசமிங்கே வீசுதடி...
கவிஆக்கம்: பாரத்
006581544486
- பாரத்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-01-15