நன்றி சொல்வோம்
“மணி சரவணன்.”
அநியாயம் பண்ணாதே
ஆசையை மூடாதே
இன்பத்தை கெடுக்காதே
ஈகை மறுக்காதே
உம்மென்று இருக்காதே
ஊமையாய் பேசாதே
எப்படியும் என்னை
ஏமாற்ற மாட்டாய்
ஜயமின்றி சொல்
ஒருத்தி நானுனக்கு ஒருவன் நீ எனக்கு
ஓலை விட்ட கடவுளுக்கு
ஓளவ்வப்போது நன்றி சொல்வோம்
ஃகனமே
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-12-17