பாதத்தோடு ஒட்டாத நிழல்
------------------------------------
சாபமிட்டு எறிந்தாலும்
பாதத்தோடு ஒட்டாத நிழலாய்
தொடர்கிறது
உறங்கும் போது
இருளின் இருளாய்
ஒட்டிக் கொள்ள முயல்கிறது
தாழிட்டு இறுக்கி
ஓரத்தில் வைத்தாலும்
பலகுரலிசை
நாய்க்கு ஊற்றப்பட்ட பழங்கஞ்சியாய்
என் ...அது
அது இல்லாமல் அலைகிறேன்
புதிதாய் தேடி...
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-11-19