Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

சுமையா?

- அடியார்க்கு அடியான்

சுமையா?

ஆண்டாய்த் தவம்செய்து அடைந்த மணிமகவு
அன்னை அவளுக்கு அருஞ்சுமை யாகிடுமோ?
விண்மீனாய் உள்ளே விளையாடும் கண்மணிகள்
விழித்திரைக் கென்றும் வேண்டாச் சுமையாமோ?

அடிவயிறு உடையும்வரை அகலா நீர்க்குடங்கள்
அம்மழை மேகத்திற் கடங்காச் சுமையாமோ?
கொடியினில் தவழும் குறுமலரும் கிளையிலையும்
கொண்டதன் கொடிக்கே கூடாச் சுமையாமோ?

நேற்றா? இன்றா? நாளையா? நினைவேயிலா
நெடிய காலமுதல் நீள்வா?னக் கூரையதில்
காற்றாடி போலுலவும் கண்கவர் ஆதவனைக்
குளிர்நிலவை வானமது கூறுமோ சுமையெனவே?

வேரெண்ணக் கூடுமோ வெறுமைச் சுமையாக
வானுயரத் தன்முடியில் வளரும் ஆலதனை
நாரதுவும் சுமையாக நினைக்குமோ தான்தாங்கும்
நன்மாலை யாகிநிற்கும் நறுமணப் பூக்களையே?

எண்ணங்கள் எல்லா மிதயத்தே சுமையானால்
எதிர்காலம் என்னுமொளி என்றுமே தோன்றுமோ?
கண்ணிற் குயிர்தரும் காட்சியே சுமையாயின்
கலைபலக் கற்பினும் கடுகளவும் பயனாமோ?

சொல்லுக்குப் பொருளே சுமையாயி?ன் கவிதையும்
சுவையு மிணைநீங்கிச் செத்துடன் மடியாதோ?
வில்லினை நாணே வெறுத்திடில் சுமையெறு
விளையுமோ பாரதத்தில் வெற்றி அறத்திற்கே?

அடியாரைச் சுமையாக ஆண்டவனே எண்ணிடின்
அமைதியாம் புகலிடம் அடியார்க்கு எங்கே?
முடியாத சுமையாக முயற்சியே மாறிடின்
முயல்கின்ற வீரர்க்கு முன்னேற்றம் எங்கே?

வாரியே வழங்கிடும் வள்ளலே சுமையாய்
வறியோரை நோக்கிடும் விதியும் வந்திடி?ன்
பாரினில் பாட்டிசைப் புலவரின் வாழ்க்கை
பஞ்சாய்த் தீய்ந்திடும் பசியெனும் தீயிலே?

நிலவும் குளிர்நீரும் நீண்ட வான்வெளியும்
நிலைபெறா உலகில் நிற்காதே இடம்மாறி
உலவும் காற்றும் உறவில்லாத் தீப்பொறியும்
உலகிற் கென்றும் உண்மையில் சுமையாமோ?

நிற்குமோ நிலைத்தே நொடிப்பொழுது மிவ்வுலகு
நிலத்தாய் அனைத்தையும் நினைத்தால் சுமையாக?
கற்கவே முய?ன்றால் கடலாய விப்பொருளை
காணலாம் புவியினிலே கண்ணெதிரே நற்பயனை!

---அடியார்க்கு அடியான்.
---புது டில்லி,
2 ஆகஸ்டு 2006.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-08-10


Join the Vaarppu Community

Log In Register

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube