இனி
சவப்பெட்டியின் நிழலில் துளிர்த்த வேர்கள்
அதி பயங்கரமாகவும்
சாவகாசமாகவும்
வளர்ந்து செல்கின்றன
என் து£க்கத்தினூடும்
விழிப்பினூடும்.
ஞாபகங்கொள்ள முடியாத
பூச் செடிகளில்
யாரோ விட்டுச் சென்ற
புன் சிரிப்பின் மீது
இரத்தத் துளிகளின் நடனம்
பாம்பின் நனினத்தோடு.
காதருகில் அச்சமூட்டும்
இரகசியங்களைச் சொல்லும் எதிரி
அழைத்துச் சென்ற விருந்தில்
எதிர்பாராத விதமாகக் கண்டேன்
கிறிஸ்துவை.
தலை கவிழ்ந்தபடியிருந்தார் அவர்
தியானமா அவமானமா
கனவுகளில் எரிந்து கொண்டிருந்தது காலம்
பன்னூறு ஆண்டுகால
தோல்வியின் நிழலைப் பிரதிபலிக்கும்
அந்த விழிகளில்
சகிப்பின் கடைசிக்கணம்
முடிவதைக் கண்டேன்.
-கருணாகரன்.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-06-05