பத்து ஹைகூ கவிதைகள்
*
அரேபியாவில் ஏ/சி மெக்கானிக்
வீடு திரும்புகிறான்
ஏ/சி சவப்பெட்டி
*
மனைவி அல்ல என்றாலும்
பூவுதிர்க்கிறது
மரம் கல்லறைமீது
*
எதையோ காட்டிக்கொண்டு அரசியல்வாதி
சிலையடி நிழலில்
தூங்கும் குடிமகன்
*
கூவத்துக் கரையில்
முளைத்திருந்தது
ரோஜாச்செடி
*
ரயில்வே இன்டர்வியூ
போய்ச் சேர்ந்தான்
தாமதமாக
*
சற்றுமுன்
இறந்துபோனார்
அனந்தசயனம்
*
தூக்கத்தில் நடக்கிற வியாதி
அவதிப் படுகிறான்
நொண்டி
*
தொப்புளைச் சுற்றி ஊசிகள்
போட்டுக் கொள்கிறார்
மிருக வைத்தியர்
*
இல்லறம் துறந்து
ஞான மார்க்கம்
மனைவி பெயர் ஞானம்
*
இருட்டிலும்
பார்த்தபடி
அம்மன் சிலை
- எஸ். ஷங்கரநாராயணன்
storysankar@gmail.com
S Shankaranarayanan
Old no 2/82 west mugappair
Chennai 600 037
mobile 94440 61944
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-04-24