நகையே!
-இப்னு ஹம்துன்
அக்கா வரும்போதெல்லாம்
நடக்க வேண்டியிருக்கிறது
அடகு கடைக்கு.
தங்கச்சிக்காகவும் இனி
தனியாக வாங்கிச்சேர்க்கணும்.
கல்லூரிக்கனவில்
மூழ்கியிருக்கும் தம்பிக்கு
கைகொடுக்க காத்திருக்கும்
அம்மாவின் தாலிக்கொடி.
இன்னமும் மீட்கப்படவேயில்லை
அண்ணனின் பயணத்திற்கு வைத்த
அண்ணியின் வளையல்களும்
அவளுடைய வாழ்க்கையும்!
அணிவதற்கன்று;
அவசரத்திற்கென்று
ஆகி விட்ட உனக்கு
நல்ல பெயர் தான்
நகையே!
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)
+966 050 7891953
www.ezuthovian.blogspot.com
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-04-17