கன்னத்தில் முத்தம்
எனக்கு
கவிதையெல்லாம்
எழுத தெரியாதென்றபோது
கன்னத்தில்
அழுத்தமாய் ஆழமாய் அழகாய்
முத்தமிட்டு இப்போது
எழுதென்றாய்!
இப்போதும் சொல்கிறேன்
உன் இதழ் என் கன்னத்தில்
எழுதிய அளவுக்கு
எனக்கு கவிதை எழுத வராது!
- ப்ரியன்.
தூரம்
*****
உனக்கும் எனக்குமான
தூரம்!
அது
விழிக்கும் இமைக்குமான
தூரம்!
- ப்ரியன்
குறுநகை
********
என் யுக யுகத்திற்கான
சந்தோசம்;
நீ சிந்தும் ஒற்றை
குறுநகையில்
ஒளிந்திருக்கிறது!
- ப்ரியன்.
குறிப்பு
*******
கவிதை ஒன்றின் ஓரமாய் குறிப்பெழுதி வைத்தேன்! குறிப்பை ஆளாளுக்கு அலசிப் போனார்கள்! யாருமே கண்டுகொள்ளாமல் அனாதையாய் கிடந்தது கவிதை!
- ப்ரியன்.
- ப்ரியன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-03-20