சொல்லி வா...
--------------------
அவன் மரணிக்கும் போது
ஒரு சேதி சொல்லிச் சென்றான் ...
ஆச்சரியப்படுத்திய அது
அச்சப்படவும் வைத்தது
விரல் பற்றி
குளிர்ந்த மூச்சோடு
கருவறைக் குரலில்
அத்தனையும்
சொன்னான் ...
தூரத் தெரிந்த
விளக்கொன்றில்
கண்ணைக் குவித்தபடி
இன்னும் சொன்னான்
கடைசியாய் சொன்னான்
அவனிடம் இதைச் சொல்லாதே...
சொன்னவை சொல்வதற்கே
மரணிக்கும் போது
என் சத்தியம் மீறிச் சொல்கிறேன்
நீயும் சொல்லி வா...
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-03-06