- எதிக்கா
தை பிறந்தால் வழி பிறக்கும்
கனத்துப் போன இதயம்
மெல்ல இளகியது
புத்துணர்வோடு
காத்திருந்தோம்
இப் புத்தாண்டின்
வருகைக்காய்
தை பிறந்தால் வழிபிறக்கும்
வழமைபோல் மீண்டும்
நெஞ்சில் ஒரு ஆதங்கம்
பொங்கலோடு பொங்கலாய்
இனிவரும் ஆண்டுகளும்
பொங்கிடட்டும்
அஞ்சிப் பயந்து
அடங்கி ஒடுங்கிப்
போன தமிழினமும்
பொங்கட்டும்
பொங்கல் பானையின் சூடு
ஆறும் முன்னே
பொங்கியெழும்
மக்கள் படை
நல்லதொரு முடிவைக் காணட்டும்
கண்ணீரை மட்டுமே
கண்ட கண்கள் எல்லாம் - அக்
கண்ணீரிலும் ஒரு ஆனந்தத்தைக்
காணட்டும்
இவ்வாண்டின்
நிறைவின் முன்
தமிழ் அன்னையின்
பிரசவம்
சுகப் பிரசவம் ஆகட்டும்
தமிழீழம் பிறந்ததென்று
தமிழ்ழினம்
ஆனந்தகக் கூத்தாடட்டும்...
- - எதிக்கா
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-01-09 00:00