வரம்!
குழந்தை வரம்
கொடு ங்கள் சாமி
என்றாள் அவள்
சரியான இடத்துக்குத் தான்
வந்திருக்கிறாய்
என்றார் சாமியார்
இந்து மதம்
மிருகங்களைத் தெய்வமாக்கி
மனிதார்களை மிருகமக்கி
இறந்தவருக்கு கோயில்கட்டி
இருப்பவர்களைப் போட்டு த்தள்ளி
மாட்டு மலத்தை
திருநீறாக்கி
மனித மண்டையில்
நாமம் போட்டது.
எமது பண்பாடு
பாம்பிற்கு பாலுற்றி
கும்பிடு வோம்
பச்சைப்பெண்ணிற்கு கள்ளிப்
பாலூற்றி
கொன்றிடு வோம்!
சோழியன் குடு மி
பணக் கஸ்ரம் தீர
என்ன வழி என்றான்
ஆசாமி!
ஒரு பத்து ரூபாய் கட்டி
பூசை செய் என்றான்
பூசாரி!
அவசியமா?
குடிசைத் தாயின் முலையில் பாலில்லை
அழிகின்றது மழலை!
கோபுரக் கோயிலில் பாலாபிஷேகம்.
தலைவர்கள்
தமிழன் நடிகர்களையெல்லாம்
தலைவர்களாக்கினான்
அதனால்
தலைவர்கள் எல்லாம்
நடிகர்கள் ஆனார்கள்
சமூகம்
நேற்று வரை
நானும் அவனைத்
தேசத் துரோகியென்றே
எண்ணியிருந்தேன்
ஆனால்
அவன் தான் உண்மையான
தேச பக்தன்
என்று நான்
உணர்ந்த போது
இன்று அவன்
உயிருடன் இல்லை!
உண்மைகள் வதந்திகளாகவும்
வதந்திகள் உண்மைகளாகவும்
உலாவரும்
எமது சமூகத்தில்
சாக்கடையில்
அனாதரவாக
மிதக்கின்றது
அவனின் பிணம்!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2005-11-16