Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

மனம் தளராதே!

- அஜந்தன் மயில்வாகனம்

மனம் தளராதே!

செல்லும் வழியெங்கும் முட்கள் இருக்கலாம்.
சேற்றுச் சகதிக்குள் உறன்கவும் வரலாம்.
நீ!
நடக்கும் பாதையெங்கும் நரிகள் வரலாம்.
நாரதர் பலர் உன்னை நளினம் செய்யாலாம்.

தோல்விகளே தொடர்கதையாய் தொடர்ந்து வரலாம்.
காயங்காளால் காயம் கனமும் ஆகலாம்.
நீ!
நம்பி இருந்தோர் நயவஞ்சகர் ஆகலாம்.
நாயே, என்றும் உன்னை நடு த்தெருவில் ஏசலாம்.

குறவர் கூட்டம் உன்னை " குத்தி" காட்டி பேசலாம்.
குறைகள் கண்டு உன்னை குரைத்தும் காட்டலாம்.
நீ!
செய்யும் காரியங்கள் செய்மையற்றும் போகலாம்.
செஞ்சோற்றுக் கடன் செய்வாரற்றும் போகலாம்.

தந்தையே உன்னை தட்டிக் கழிக்கலாம்.
தாயும் உன்னை ஏட்டி உதைகலாம்.
நீ!
கடக்கும் கடவையெங்கும் கற்கள் கிடக்கும்.
காண்பவை எல்லாம் கடினமாய்த்தோன்றலாம்.

சுற்றம் கூட சுயநலம் ஆகலாம்.
சுருதியில்லை ஏன்று சுடு சொல்லும் பேசலாம்.
நீ!
சுமக்கும் சுமையே காலனும் ஆகலாம்.
காலமும் உனக்கு கணைகள் வீசலாம்.

பள்ளியை விட்டு தள்ளியும் வரலாம்.
பாதைகள் தோறும் பள்ளங்கள் இருக்காலாம்.
நீ!
படிக்கும் படிப்பும் பயனற்றும் போகலாம்.
அடிமேல் அடிவாங்கி அனாதையும் ஆகலாம்.

நினைப்பவை யாவும் நிரந்தரமற்றும் போகலாம்.
நிழலே உன்னை நிந்தனை செய்யாலாம்.
நீ!
நிற்கும் இடத்திலும் புதர்கள் தோன்றலாம்.
நிர்வாணம் தான் உன் ஆடையும் ஆகலாம்.

பார்க்கும் இடம் எங்கும் பருந்துகள் பறக்கலாம்.
பகலில் கூட பகலவன் மறையலாம்.
நீ!
படு க்கும் படு க்கையும் முள்ளாய் மாறலாம்.
பஞ்சமே உந்தன் வாழ்கையாய் மாறலாம்.

நஞ்சு மனிதர்கள் உன்னை நகைத்தும் காட்டாலாம்.
பிஞ்சு மழலையும் நஞ்சைக் கக்கலாம்.
நீ!
கற்றவை யாவும் கானல் ஆகலாம்.
கடக்க கடக்க கானகமே கணாலாம்.

இவையென்ன
எவைவரினும் வரட்டு ம்.....
ஆனால்
மனம் தளராதே!


-- அஜந்தன் மயில்வாகனம்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2005-09-18


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • அஜந்தனின் 7 கவிதைகள்

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube