நல்லவன் நீ
நினைவுகள் தடம்மாறிப் போவதனால்
தாலாட்டிச் செல்லும் எண்ணங்கள்
துயரங்களாய் மாறி
மீளாத சோகத்தில்
ஆழ்த்திச் செல்கின்றன..
அக்காவாக, தங்கையாக
தாயாக, கேட்கிறேன்
விட்டு விடு
இந்த நாசமான காரியத்தை..
கொட்டிவிடு உன்
இதயத்தின் பாசத்தை
குடிக்காதே வெறிக்காதே
ஒளித்து ஓரமாய் நின்று
மறைத்து மற்றவரை மதியாது
குடித்து குட்டிச் சுவராவதில் தான்
உனக்கென்ன லாபம்?
உலகம் தேடுகிறது நல்லவனை
மாறிவிடு நல்லவனே!
நீ நல்லவன் என்று தான்
நானும் சொல்கிறேன்
நாடும் சொல்லும் உன்னை..
திருந்திவிடு தம்பியே!
தனையனே! அண்ணனே!
தந்தையே!
--புஷ்பா கிறிஸ்ரி
pushpa_christy@yahoo.com
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2005-08-14