Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

தேவத...

- நிஹ்மத்

தேவத...

சிறு வயதின்
கனத்த மின்னலில்
தூக்கம் தொலைத்த
பயத்தில் நான்!
கையை இறுகப்பற்றிய
ஒருவள்தான் இன்றுவரை
இதயம் பற்றியபடி...

நிலத்தில் வீழும்
இலையின் அதிர்வுபோலத்தான்
அவளின் தொடுதல்
ரகசிய மொழி...

இயல்பின்
எந்தச்சோகமெனினும்
முகம் புதைத்து அழ
அவள் மடியிருக்கும்
கவலைப்படுவதில்லை
என் இதயம்...

வறண்ட நிலத்தில்
வந்திட்டேனோ
என்ற பயத்தில்
நானிருந்தபோது
எனக்கு
மழைத்துளிகள் பரிசளித்தவள்
நீதான்...

வாழ்க்கையொடு
வலியென்றபோது
மருந்திட்டவள்...
இராத்திரியில்
விழித்துப் படிக்கையில்
கண் சிவப்பவள்...


உன் அருகாமையில்
என் நரகம்
எரியக் கண்டேன்!
உன் விலகுதலில்
என் விழியில் வியர்த்திடக்
கொண்டேன்...

எனக்காய்
வாழ்வதன் பொருட்டு
உன் இதயப்பறவையிடம்
அடிக்கடி நிகழும்
சிறகு உதி£¢ப்பு!
என் உயிர்வரை வலிக்கும்...

பூப்பதில் புனிதம் கொள்ள
பூக்களின் தேடல் போல
நான் பிறப்பதில்
புனிதமாக
மீண்டும் உன்
கருவறை கொடுஎன் தேவதையே!


--நிஹ்மத்
nihrasikow@yahoo.com
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2005-08-14


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • நட்புக்காலம்
  • பூக்கள் ஆகிய...

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube