முன்னுக்குப் பின் முரண்
ஆரம்பப்பள்ளியில்.....
"சாதிகள் இல்லையடி பாப்பா..."
முதல்வகுப்பில்
ஆசிரியர்
உரக்கச் சொல்லி
பாடம் நடத்துகிறார்.
முதல் வகுப்பில்
சேர வந்த
மாணவனிடம்
"உன் ஜாதி என்ன?"
தலைமை ஆசிரியர்
கேட்டுக்கொண்டிருக்கிறார்.
பொதுக்கூட்டத்தில்.....
"ஜாதியை
ஒழிப்பதுதான்
எங்கள் இலட்சியம்"
-அமைச்சர் ஆவேசம்!
நான்கு சுவர்களுக்குள்.....
"என்னை
அரும்பாடுபட்டு
வெற்றி பெறவைத்த
நம் ஜாதி
சங்கத்தினருக்கு
நன்றி!
நம் ஜாதிக்காரர்கள்
முன்னேற்றத்துக்கு
பாடுபடுவேன்."
- அமைச்சர் வாக்குறுதி.
- ஆல்பர்ட்.
- ஆல்பர்ட
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2005-03-27