வேர்களின் வியர்வைத் துளிகள்
கனிகளின் சுவைகளோ- கிளைகளுக்கு
பாவம் வியர்வைத் துளிகளோ
இந்த வேர்களுடையது
கிளைகளின் கவலையோ
கனிகள் மேல் இருக்க
இந்த வேர்களின்
வேதனையை யார் அறிவாரோ
அரசியல்வதிகள் ஆசைகள்
ஆட்சியின் மேல் இருக்க
இந்த ஆதரவற்ற மக்களின்
நிலையை யார் அறிவாரோ
-சே. கார்த்திக் பாபு
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2004-11-21