சுமைகள்
சுமைகள் கனமாக இருப்பதால் இமைகளும் வலிக்கிறது.
இதயமும் வலிக்கின்றது!
அவளின் நினைவுச்சுமைகள்
இவ்வளவு கடினமென்று தெரிந்தால்
மறந்து போன மரணமென்ற வார்த்தை
ஞாபகம் வருகிறது!
என்னைத் தொலைத்து தொலைனரம்
போனவளே!
எங்கிருக்கிறாய்?
என்னையும் உன்னுடன் எடுத்துச்செல்!!
இறைவா! அவளை மறக்க மனமில்லாமல்
வரம் தா!!
அவளின் நினைவுகள் நெஞ்சில்
கல்வெட்டுக்களாய்.....
பா. சசிக்குமார்
அறந்தாங்கி
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2004-11-21