உன்னை இழந்த கோடை
----------------------------------
தனிமையின் வெப்பம் ஒரு செதில் போல
உட்டியுலர நீ கோடையை கடந்தாய்
அல்லது கோடையில் கடந்தாய்
நரம்புகளினுள் ஊசிதுளைக்கும்
ஒற்றைக்கோடை - பிரிந்தேன்
நிராகரிப்புகள் அதிகமாகி உனை கைவிட்டுப்பிரிந்தேன்
பிரியும் போதே கோடையெனைச் சுட்டது-கோடை என்பது சுடும் உண்மை
பிரிந்தேன் பிரபஞ்சமுருக
கோடையென்பதொரு அவசியான பொய் - மீண்டும் மெல்ல
அழைக்காமல் அழைத்தாய்
இருந்தும் உன் நிராகரிப்பில் சிறு திசுக்கள் எரிந்ததுண்மை - பிரிந்தேன்
வானம் அழுதும் ஓயாத கோடை
எனை முண்டி விழுங்கக் கசிந்துலர்ந்தேன்- அன்பே பிரிவு என்பது
கோடையின் தன்மை
எனை நீ மறுத்தாயெனப் பிரிந்தேன்
நீயற்றபின் எனை பார்த்து
யாருமே கோடையில் பிரிவதில்லை
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2015-11-04