காவல்காரன்
--------------------
முற்றத்தில் முள்ளில்லாத
ரோஜா
கைக்கெட்டிய தூரத்தில்
செவ்விழ நீர் குலைகள்
தடவியே பார்க்கலாம்
காவல்காரனாகிவிட்ட
தோட்டக்காரன்
படலைகள்
திறந்தேகிடக்கும்
“பாஸ்கள் சலுகைகள் ரத்து”
சும்மா ஒரு பேச்சுக்குத்தான்
வந்தவர்களை வரவேற்கும்
கரும்புத்தோட்டம்
இடையில்
படுத்துக்கிடக்கும்
வெள்ளரிக்காய்
அப்புறம்..
வத்திப்போன பூவல்
கோடையின்வெளிச்சம்
காய்ந்து சுருங்கிப்போன
புடலங்காய்
காவல்காரண் கண்டுகொள்ளவே இல்லை
கோடையோடு கோபம்
எட்டிக்கடந்தால்
கரும்புத்தோட்டம்
மூடிக்கிடக்கும் வாய்க்கால்
பாம்புகளின் நடமாட்டம்
பக்கத்து தோட்டக்காரனின்
பாய்ச்சல் தண்ணி
வாய்க்காலுக்குள்
சுதந்திரமாய்..
வந்துவிழும்
அவனால்தான்
அந்தகரும்புக்கே சுவை..
தோட்டக்காரன்..
காவல்காரனாய்......
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2014-10-04