அவன் பயணம்...
------------------------------
சுடுமணலில் புதையும்
பாதங்களுடன்
நடந்துகொண்டிருந்தான்.
சொற்ப நேரமே
இப்பயணமாயிருக்குமென
தேற்றியபடி
கால்களுக்கு சமாதானம்
சொல்லிக்கொண்டான்.
வெக்கையின்
பின்புலத்தில் வேக நடை
பயின்றிருக்கவேண்டிய
நாட்களை
தவறவிட்டிருந்தான்
முற்காலத்தில்.
இப்போது
ஒருகோப்பைக்
கண்ணீர் சேமித்தவன்
நனைத்து அழுதுவிடவோர்
தோளைக் கற்பனைச் செய்ய
பசுங்கிளையொன்று
நிழல்கொடுக்கத்
துவங்கியிருக்கிறது
அவனுக்கு.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2014-10-04