Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

கோபம்

- உமர் அலி

கோபம்
------------

முதுமைக்கு
விரைவாகவே
வரவேற்பு விழா நடத்தத்
துடிக்கின்ற
துடிப்பான இழைஞன்!

மானிடத்தை
மடத்தனத்தீவுக்கு
கொண்டுசெல்லும்
மரக்கலம்!

எதிரிகளை
கூட்டி கொள்ள
நீ திறந்த கதவு!

குறை காணுவதே
உன் குறை
என்று கூறியதால்
உனக்குள்
குதிக்கின்ற உணர்வு

உப்புத்தின்றால்
கூடுமென்று யாரோ
சப்பையாகச்சொன்னது
ஞாபகம்!

உன்
உறவுகளை சிதைக்கின்ற
வன் அமிலம்

அது
இதயங்களை
கிழித்து
உதயமாகும் கண்ணீரை
ரசிக்கின்ற காட்டேரி!

பொறுமை என்ற
பாடத்தை இன்னும்
படிக்காத முட்டாள்!

மிருகங்கள் உறுமுவது
இரைக்காக
நீ முறுகுவது
எதற்காக?

சந்தோஷ விருட்சத்தை
படிப்படியாய்
அரித்து
அடியோடு
சரிக்கும் சந்தர்ப்பக்
கறையான்!

நீ அடிக்கடி
முகம் சுளிப்பதால்
முக நரம்புகளை
விரைவில்
களைக்க வைக்கும்!

ஆகவே நீ ............

நில்
நிதானி
யோசி
ஆழமாக சுவாசி
ஆசுவாசப்படு!

உதிரமடங்கும்
உணர்வு தணியும்
நரம்பு தளரும்
புன்னகை மலரும்

சந்தோசம் மொட்டுவிட்டு
வாழ்வே நந்தவனமாகும்
நறுமணம் பரவும்
உறவுகள் பெருகும்!

முகமும் சிரிக்கும்

ஆதலால்
மனிதா நீ
கோபப்படாதே
கோபிக்க நடக்காதே!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2014-03-23


Join the Vaarppu Community

Log In Register

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube