வாழ்க்கை.. அபலைகள்.. ஓட்டைக் கூரைகள்
01.
வாழ்க்கை
-------------------
வாழ்தல் என்பது உடலை
மண்ணுக்கு
உரித்தெழுதிக் கொடுத்துவிட - அது
ஒன்றும்
சரணாகதி யல்ல
பிரசவிக்கப்பட்ட ஒவ்வொரு ஜீவனும்
பிறர் சபிக்கச் சபிக்க
மடிந்து போவதும்
ரோஜா மலரொன்று மங்கையின்
குழலுக்கென்று பறிக்கப் பட்டு
பதாகைகளுக்கு தாரை
வார்ப்பதும்
ஒன்று
மேட்டுக் குடிகளெல்லாம் அதிகாரத்
தந்திகளை
அடுத்தவன் தலையிலும்
அடுத்ததை நெஞ்சிலும் இழுத்து
இறுகக் கட்டி
சோம பானத்திற்கு சொகுசான
இசையொன்றாய்
கட்டை விரல் கொண்டு கடின அழுத்தொன்றில்
இசைக்கு கோலமிடும்
இறுமாப்புக்
கலைஞர்கள்
அதிகாரப் பெருவாரி ஒரு நாள்
இடிந்து விழும்
அன்றொரு பொழுதில் அதன் அருகில்
சென்று
நுகர்ந்து பாருங்கள்
அடிமைகளையும், அப்பாவிகளையும்
அடி நெஞ்சில்
அழுத்தி அழுத்தியே வெடித்துச்
சிதறிய மனிதக்
குலத்தின்
நெஞ்சுக் கூடுகள் காறித் துப்பிய இரத்தச்
சுவாலைகள் இன்றும்
அணையாமல் ஆடி அசைகின்ற
தியின் மணம் உம்
நாசிகள் வழினுளைந்து துன்பங்களை
துலக்கிவிடும்
ஆட்சியாளன் ஒவ்வொருவனும் அத்திபாரம்
என நினைப்பது
கல்லுக்காய் சிதைகளையும்
நீருக்காய் இரத்தக்காறைகளையும்
தான்
கால்ம் போயினும்
கசிகின்ற வலிகள் இன்னமும்
கறை படியாத
பளிங்குகளாய்
காயத்தின் விளிம்புகளுக்கு களிம்பு
பூசுகின்றன
அடிமேல் அடி அடித்தும் அசையாத
உரு ஒன்று
நிலையாக நிலத்து விடின்
அடுத்த நாள்
உதயம் அதற்கு பெயரொன்றை தரும் அடித்தவன்
யாரென்றும்
அதிலேயே பொறித்திருக்கும்
சீறுகின்ற சிறுத்தையும்
மாறுகின்ற மாற்றமும்
மாறும் வரையிலும் மனைவிக்கும் தெரியாது
இவையெல்லாம் கீழேகிடந்து
கால்களில்
இடறுப்பட கவிதைப் பொலிவுக்கும் கவர்ச்சி
உயர் நயப்புக்குமாய்
சொற்களுக்கும், வரிகளுக்கும் பலவந்த முடிச்சுப்
போடுபவன் கவிஞன் என்ற பெயரை
களவாய்
உறவு கொள்பவன்.
02.
அபலைகள்
-------------------
சிந்து கின்ற குருதியும் சிதறிப் போன
வாழ்க்கையும்
அஞ்சும் அவலமும்
அலறும் உறவுகளும்
அடிவயிற்றைப் பிடித்து
கெஞ்சுகின்ற ஓலம்
விடியலுக்கு ஏன் எங்களை
மட்டும்
பிடிகுதில்லை...!
அவலைக் குரல்களெலாம் ரணங்களை
இழந்து
யுகங்களைக் கடந்து
அந்தி அந்தியாய்
சிந்திக் கொண்ட பிரளயத்
துன்பங்களும்
அடிமந்தில் ஓங்கி அலறுகிறதே
விடியலுக்கு ஏன் எங்களை
மட்டும்
பிடிகுதில்லை...!
ஆழப் பதிந்த ஆற்றொணாத்
துன்பத்தை
அள்ளி எறிந்து எறிந்தே -எம்
கைகளின் மூட்டுக்கள் தேய்ந்து
விட்ட வலுவிழந்த
அங்கவீனர்கள் நாம்
ஜயோ
விடியலுக்கு ஏன் எங்களை
மட்டும்
பிடிகுதில்லை...!
வரலாற்று ஏடுகளில் கடும் இரத்தினச்
சுருக்கங்களாய்
பதிந்து விட்ட - எம்
இரத்த சரித்திரங்களை
அழிப்பத்ற்காய்
கண்ணீரை அள்ளி இறைத்து இறைத்தே
உவர் நீரில்
மூழ்கிவிட்ட
கண்கணிகள் நாம்
ஜயோ
விடியலுக்கு ஏன் எங்களை
மட்டும்
பிடிகுதில்லை...!
03.
ஓட்டைக் கூரைகள்
-------------------------------------
நேற்று என் வீட்டிற்கு திடீரென
வந்த உன்னை
சாவகாசமாய் உபசரிக்க
கூச்சப்பட்ட நான்
என்னை மண் சுவருக்கு பின்னும்
வந்த உன்னை
மனச்சுவருக்கு முன்னும்
மறைந்து கொண்டு புழுங்கித்
தவித்தேன்
நீ வரும் போதே
துணைக்கு இன்னொன்றையும்
அழைத்து வந்து விட்டாய்
உன் கருங்கூந்தல் லயிப்பிற்காய்
கவர்ந்து விட்ட கார்
மேகங்கள்
தன்னினமென்று கூடி வந்ததால்....!
உன்னையும் தன்னையும்
ஒப்புக்கு வைத்து
பெற்ற பெறு பேறு வந்ததால்
அழகில் தோற்றுவிட்ட
அத்தனையும் அல்லோல கல்லோலப் பட்டதால்
காருக்கு வேர்க்கத் தொடங்கி
அழுகையில்
முடிந்தது
அவள் என் கையில், என் வாழ்க்கையில்
முடிந்தது
சூரியக் கதிர்களுக்காய்
கூரைக் கிடுகுகளின் வரிகளும், மேய்ச்சலின்
இடைவெளிகளும்
விலக்கி விடப் பட்டு
தினம்
அவ் ஒளியிலேயே ஜீவனத்திற்கு
தீனி போட்டுக்
கொண்டிருந்தது
என் ஓலை வீட்டுக் கூரைகள் என்று
உனக்குத் தெரியாது தானே !
நானும் உனக்குச்
சொன்னதில்லை
மண்சுவர்களின் பின் மனங்களைப்
புதைத்துக் மழுங்கிய
சிரிப்புடன் - நான்
தளம்பியது இதற்காக அல்ல
கால போகத்திற்கு
வீசிய கச்சான் காற்று கட்டி
இழுத்து வந்த
சோளக் காதிர்களைப் போல் என்
மனைக்கு திடீர் அனுமதியை
திருடிக் கொண்ட
உன்னை பாங்காய் உபசரிப்பதா? இல்லை
சிந்தும் மழையில்
சிதைந்து கொண்டிருக்கும்
மண் சுவர்களுக்கு
மாங்கல்யம் அறுத்துக் கொண்டிருக்கும்
ஓட்டைக் கூரைகளுக்கு
அலுமினியப் பானைகளை அங்காங்கே
அடுக்குவதா?
என்பதுதான்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2013-08-29