நம்பிக்கை.. கலியுக மணிமேகலை
01.
நம்பிக்கை
--------------------
வில்லும்
கல்லும்
வனமும்
கவிதையும்
வந்து கொண்டே இருக்கின்றன.
ஒரு இராமனாவது
வாழ்வான் என்ற நம்பிக்கையில்!
02.
கலியுக மணிமேகலை
----------------------------------
பிச்சை பாத்திரத்தில்
அன்னம் ஏந்தி வந்தாள்
சமண மணிமேகலை.
பிள்ளை ஏந்தி வருகிறாள்
கலியுக மணிமேகலை.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2013-08-29