கடவுளுக்கு வந்த சோதனை
-----------------------------------
சும்மாயிருந்த கடவுளை
அணிகல அலங்காரோத்தோடு
வீதி உலாவுக்கு
அழைத்து வந்தான் மனிதன்.
வீதிக்கு வந்த கடவுளை
எந்த வழியில் அழைத்துப்போவது
என்பதில் தொடங்கியது பீதி.
ஆளுக்கொரு சர்ச்சையில்
கடவுளின் அர்ச்சனை
காணாமல் போனது.
வாய் சண்டை
கை சண்டையாகி
கலவரமானது.
கலவரத்துக்கான
ஆள் சேர்ப்பு பணியில்
கடவுள் தனித்து விடப்பட்டான்.
வீதி உலா போக வந்தவன்
வீதியிலேயே நின்றான்
விக்கித்துப்போய்!
கடவுள் மட்டும் தான்
சோதிப்பானா? - சமயங்களில்
மனிதனும் சோதிப்பான்
கடவுளை!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2013-03-01