கையாள விரும்பாத ஓர் கவிதைமொழி!
------------------------------------------------
முகமூடி அணிந்த இருள் ஒன்று
கவ்விக்கொண்ட சொப்பனங்கள்
சுமந்த அந்த சுதந்திரமற்ற அறையின்
முனையில் சுவாசிக்க கூட முடியாது
சுருண்டுகிடந்ததொரு கவிதை!
மண்ணில் ஜனனித்த நாள் முதலாய்
விடுமுறையின்றி ரசிக்கப்பட்ட
அக்கவிதை மரணத்தை யாசித்து தன்
சுவாசங்கள் சுருக்கி சுருண்டுபோய்
கிடக்கிறது, சுதந்திரம் என்ற சொல்லையே
சுத்தமாய் துறந்திருக்கும் அவ்விருள் சூழ்ந்த
இருட்டறையில்!
தற்கொலைக்கான முயற்சிகள் யாவும்
தட்டிக்கழிக்கப்பட்ட நிலையில் தளர்ந்து
போன நம்பிக்கைத்தாலாட்டை மீண்டும்
ஒருமுறை தூசி தட்டி மெட்டமைத்து
பாடியது கட்டவிழ்க்கப்பட்டிருக்கும்
அக்கவிதை!
புல்லாங்குழல்களின் துளைகள் வழியே
ஊடுருவும் காற்று உயிர் பெற்ற
ஓரிசை போல் உருமாறுவதைப்போல
இக்கவிதையின் கண்களில் கலந்த
அகோரக்கோரிகள் கூட அம்சமுள்ள
ஓர் அற்புதப்பிறவிகளாய் அறியப்பட்டிருந்தனர்!
ஆற்றாமையின் அடித்தளப்பாதடியில்
அணுவணுவாய் அனுங்கிக்கொண்டிருக்கும்
ஒளியறியா கவிதையொன்றினால் உள்
மூச்சு சுவாசத்தை வெளியெறிந்து விடுவதை
தவிரவும் வேறென்ன செய்து விட முடியும்?
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2013-01-01